ETV Bharat / bharat

மீண்டும் அதிகரிக்கும் கரோனா.. முதலமைச்சருக்கு தொற்று உறுதி.. - ராஜஸ்தானில் கரோனா

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் கரோனா
மீண்டும் அதிகரிக்கும் கரோனா
author img

By

Published : Apr 4, 2023, 5:39 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் ட்விட்டர் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை வல்லூநர்களுடன் ஆலோசனை நடத்தின.

சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் மருத்துவமனைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்களில் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில், தொற்று பாதிப்பு கண்டறியப்படுவதால் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. லேசான அறிகுறிகளுடன், நானும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

ஆகவே, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சில நாட்களுக்கு எனது வீட்டில் இருந்தே பணியாற்றுவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனித்துக் கொள்ளுங்கள். கரோனா வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இவரை போலவே முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரிசோதனை முடிவில், எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக வசுந்தரா பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிக்கிமில் பனிச்சரிவில் சிக்கிய 150 சுற்றுலா பயணிகளின் நிலை என்ன.? ஆறு பேர் உடல் மீட்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.