ETV Bharat / bharat

'ராஜாராம் மோகன் ராய்' - இந்தியச் சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல் - Social reformer Raja Ram Mohan Roy

இந்தியாவில் சதி நடைமுறையை ஒழித்தவர் ராஜா ராம் மோகன் ராய் என்பதை நாம் அனைவரும் பள்ளிப்பருவ வரலாற்றுப் பாடத்தில் படிக்காமல் இருந்திருக்க மாட்டோம். கணவர் இறந்தவுடன், மனைவியும் அதே சிதையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கொடூரமான உடன்கட்டை ஏறுதல் என்ற மூட வழக்கத்திற்கு எதிராக ராம் மோகன் போராட அவரது சொந்த வாழ்க்கையின் ஒரு சம்பவமே தூண்டுகோலாக இருந்துள்ளது.

ராஜா ராம் மோகன் ராய்
ராஜா ராம் மோகன் ராய்
author img

By

Published : May 22, 2021, 7:13 PM IST

"நீங்கள் மரணடைந்த நாள் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என எண்ணிப்பாருங்கள். உங்களைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருக்க, உங்களால் திரும்பி பதிலுக்கு விவாதம் செய்ய முடியாது என்பதை"... இந்தியா மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் ராஜா ராம் மோகன் ராய் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம் இவை.

1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்றைய வங்க மாகாணத்தின்(தற்போது மேற்கு வங்கம்) ராதா நகர் கிராமத்தில் ராமகந்தோ ராய், தாரிணி தேவிக்கு மகனாய்ப் பிறந்த ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர்.

ராஜா ராம் மோகன் ராய்யின் முழு உருவப்படம்
ராஜா ராம் மோகன் ராயின் முழு உருவப்படம்

பிராமணக் குடும்பத்தில் ராம் மோகன் ராய் பிறந்த தனது சொந்தக் கிராமத்தில் பள்ளிக்கல்வியை முடித்தார். இளமையிலேயே, தனது குடும்பத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழமைவாத மூட வழக்கங்களை எதிர்த்துவந்த இவர், ஒரு கட்டத்தில் வீட்டிலிருந்து வெளியேறி இமயமலை, திபெத் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். பிகார் மாநிலத்தில் உள்ள மதரசாவில் சேர்ந்து பாரசீகம், அரபி மொழிகளைக் கற்ற இவர், 1822ஆம் ஆண்டில் மிரத்-உல்- அக்பர் என்று பாரசீக மொழி நாளிதழை வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்குச் சென்று சமஸ்கிருதம் கற்ற இவர், வேதம், உபநிடதம் உள்ளிட்ட மத நூல்களைப் பயின்று அவற்றை வங்கம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்தார். சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, ஆங்கிலம், வங்கம், இந்தி என ஆறு மொழிகளில் புலமை பெற்றிருந்த ராம் மோகன் ராய் 1816ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் ஆங்கில வழிக் கல்விக் கூடத்தைத் தொடங்கினார்.

இந்தியாவில் சதி நடைமுறையை ஒழித்தவர் ராஜா ராம் மோகன் ராய் என்பதை நாம் அனைவரும் பள்ளிப்பருவ வரலாற்றுப் பாடத்தில் படிக்காமல் இருந்திருக்க மாட்டோம். கணவர் இறந்தவுடன் அவரது மனைவியும் சிதை நெருப்பில் உடன்கட்டை ஏறுதல் என்ற கொடூரமான மூட வழக்கத்திற்கு எதிராக ராம் மோகன் போராட அவரது சொந்த வாழ்க்கையின் ஒரு சம்பவமே தூண்டுகோலாக இருந்துள்ளது. அவரது அண்ணன் ஜக்மோகன் மறைந்தபோது, அவரது 17 வயதேயான அண்ணி அல்கமஞ்சரியும் உடன்கட்டை ஏறிய கொடூர நிகழ்வு ராம்மோகன் மனதில் ஆறாத ரணமாக மாறிப்போனது.

பண்டைய இந்தியாவில் நிகழ்ந்த சதிக் கொடுமை

1813ஆம் ஆண்டு முதல் சதி நடைமுறைக்கு எதிராக தீவிர போர் நடத்திவந்தார் ராம் மோகன் ராய். அவரது நீண்ட போராட்டத்திற்கு 1829ஆம் ஆண்டு பலன் கிடைத்தது. அன்றைய வங்க கவர்னர் வில்லியம் பென்டிங் மூலம் வங்க மாகாணத்தில் சதி நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியப் பெண்களின் உரிமைக்குரலுக்கான முதல் அங்கீகாரம் அன்றுதான் விதைக்கப்பட்டது எனலாம்.

இந்த சட்டத்தை ஆங்கிலேய அரசு திரும்பப்பெறவுள்ளது என்று தகவல் பரவ, 1830ஆம் ஆண்டு தாமே நேரடியாக பிரிட்டன் சென்று சதிக்கு எதிரானத் தடையை நிலைநிறுத்தினார் ராம்மோகன் ராய்.

சமூக சீர்திருத்தம், மதம், அரசியல், கல்வி, பொது நிர்வாகம் என பலதுறை ஈடுபாடு கொண்டிருந்த ராம் மோகன், 1828ஆம் ஆண்டில் இந்திய துணைக் கண்டத்தின் முதல் சமூகச் சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜத்தைத் தொடங்கினார். இந்தியாவின் முதல் செய்தித்தாளை வங்க மொழியில் "சம்பாத் கொமுதி" (Sambad Koumudi) என்ற பெயரில் தொடங்கினார்.

பிரிட்டனில் உள்ள ராம் மோகன் ராய் நினைவிடம்

நவீன சிந்தனையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பின்னாளில் கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றார். சமூக சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட இவர் பலதாரத் திருமணம், குழந்தைத் திருமணம், சாதி ஆதிக்கம் போன்றவற்றுக்கு எதிராகவும் கைம்பெண் மறுமணம் போன்ற பல முற்போக்கு நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் களப்பணியாற்றினார்.

முகலாய அரசர் இரண்டாம் அக்பர் இவருக்கு "ராஜா" பட்டம் அளித்து பிரிட்டனுக்கானத் தூதராக இவரை இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார். 1833ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பிரிட்டன் நாட்டின் பிரிஸ்டல் நகரில் உடல் நலக் குறைவால் ராஜா ராம் மோகன் ராய் உயிரிழந்தார். பிரிஸ்டலில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கே நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது நினைவாக பிரிட்டன் அரசு பிரிஸ்டலில் ஒரு தெருவிற்கு ராஜா ராம்மோகன் வே என்று பெயர் சூட்டியுள்ளது.

குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற தீமைகளிலிருந்து வெளியேறி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்றளவிற்கு சுதந்திர இந்தியா தற்போது முன்னகர்ந்துள்ளது. இன்று லிவ்விங் டுகெதர் என்றளவுக்கு நவீன சமூகம் உருமாறியிருந்தாலும், அதற்கு ஆதாரமாக, பெண்ணுரிமைக்கான விதையை இந்திய மண்ணில் விதைத்த ராஜா ராம் மோகன் ராயின் 249ஆம் பிறந்தநாள் இன்று...

ராம் மோகன் ராய் கல்லறையில் உள்ள அஞ்சலிக் குறிப்பு

இதையும் படிங்க: இந்தியாவின் 'மக்கள் தலைவன்' (லோக் நாயக்) ஜே.பி.யின் கதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.