டெல்லி முழுவதும் மிதமான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட வானிலை ஆய்வு மையம், டெல்லியில் உள்ள பல பகுதிகளில் (பஹதூர்கர், குருகிராம், மானேசர், ஃபரிதாபாத், பல்லப்கர், லோனி தேஹத், காஜியாபாத், இந்திராபுரம், சாப்ராலா, நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா) இடியுடன் கூடிய மிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் " என தெரிவித்துள்ளது.
டெல்லியின் காற்று தரக்குறியீடு (Air Quality Index) 48ஆக பதிவாகியுள்ளது. டெல்லி அரசு நிறுவனங்களின் கூற்றுப்படி இந்தக் குறியீடு சிறந்ததாக கருதப்படுகிறது. அங்கிருக்கும் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்வதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வானிலை இதமாக இருக்கிறதென மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’எதிர்க்கட்சிகள் அமளியால் மழைக்கால கூட்டத்தொடரில் 133 கோடி ரூபாய் இழப்பு’ - ஒன்றிய அரசு