டெல்லி: இந்தியாவின் புல்லட் ரயில் என்று அழைக்கப்படும் வந்தே பாரத்(vande bharat) ரயில் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (டிச.14) பதிலளித்தார்.
அதில், கடந்த 6 மாதங்களில் வந்தே பாரத் ரயில் 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ஒருமுறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்தியாவில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தே பாரத் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் அதிகபட்சமாக வந்தே பாரத் ரயில் சேவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ரயில் சேவை டெல்லி - வாரணாசி, சென்னை - மைசூரு, மும்பை - காந்திநகர் உள்ளிட்ட 6 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சென்னை பள்ளிகளில் நிர்பயா நிதியின்கீழ் சானிட்டரி நாப்கின்: மாநகராட்சி திட்டம்