ETV Bharat / bharat

போபாலில் 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள்தனிமைப்படுத்தும் மையமாக மாற்றம்! - மையமாக மாற்றம்

கரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகள் ஞாயிற்றுக்கிழமை(ஏப்.25) முதல் செயல்படத் தொடங்கியது.

Covid care centre
Covid care centre
author img

By

Published : Apr 25, 2021, 8:22 PM IST

போபால்: கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக, இந்திய ரயில்வே 300 படுக்கைகள் கொண்ட 20 ரயில் பெட்டிகளை கோவிட்-19 சிகிச்சைக்கான தனிமைப்படுத்தும் மையமாக, இன்று முதல் செயல்படத் தொடங்கியது.

போபால் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட 300 படுக்கைகள் கொண்ட இந்த கோவிட்-19 தனிமைப்படுத்தும் மைய வசதியானது, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) முதல் செயல்படத்தொடங்கியது.

இந்தத் தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகள், போபால் ரயில் நிலையத்தின் 6 ஆவது பிளாட்பார்மில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக, மேற்கு மத்திய ரயில்வேயின் போபால் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

Covid care centre
தனிமைப்படுத்தும் மையமாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்

"ரயில் பெட்டியில் அமைக்கப்பட்ட இத்தனிமைப்படுத்தும் மையமானது, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊழியர்களைக் கொண்டிருக்கும்" என்று மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தத் தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளில் தற்போது ஆக்ஸிஜன் வசதி, தற்போது ஏற்படுத்தப்படவில்லை. ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் COVID-19 நோயாளிகளை இந்தப் பராமரிப்பு மையத்தில் அனுமதிக்க முடியாது என்று ரயில்வே அலுவலர்கள் தெளிவுப்படுத்தினர்.

இருப்பினும், அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அங்கு கிடைக்கும். ரயில் பெட்டியில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனிமைப்படுத்தும் மையத்தில் குளிரூட்டிகள் மற்றும் கொசு வலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதனால் கோவிட் -19 நோயாளிகள் கோடை காலத்தில் வசதியாக இருக்க முடியும். இந்த மையத்தில் நோயாளிகளின் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரங் மேலும் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில், 20 ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தும் மையத்தை இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது, அதில் 320 படுக்கைகள் இருக்கும். இந்த ரயில் பெட்டிகள் ஏப்ரல் 25 முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை(ஏப்.24) ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.