நாட்டின் விலைவாசி உயர்வு குறித்து ராகுல் காந்தி தனது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குறிப்பாக பெட்ரோல், டீசல் உயர்வு குறித்து அவர் தனது ட்வீட்டில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.100-க்கும் டீசல் விலை ரூ.90-க்கும் விற்பனையாகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. பொதுமக்களுக்கு மோடி அரசு சுமையை ஏற்றிவருகிறது.
மக்கள் சந்திக்கும் இந்த இடர்ப்பாடுகளுக்கு மோடி தலைமையிலான அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து மோசமான சாதனைகளையும் முறியடிக்கும் பெருமை ஒரு நபருக்குத்தான் கிடைக்கும்" என்றார்.
நரேந்திர மோடியைத்தான் ராகுல் காந்தி ஒரு நபர் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காந்தி ஜெயந்திக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து செய்தி