நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ஆம் தேதியான இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று, அமர்வில் பேசிய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், "பிப்ரவரி 2ஆம் தேதியன்று ராகுல் காந்தி மக்களிடம் உரையாடுகையில், புதுச்சேரி, கொச்சியில் மீன்வளத் துறை இல்லை எனக் கூறினார், அவருடைய நினைவாற்றலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆட்சிக்கு வந்ததும், மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் அமைப்போம் எனக் கூறியது யார்?" எனக் கேள்வி எழுப்பினார்.
இதுப்போன்றை, காரைக்காலில் நடந்த பொது பேரணியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "2019இல் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம் அமைத்த போது, ராகுல் காந்தி விடுமுறைக்குச் சென்றுவிட்டாரா" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
கடந்த பிப்.24, புதுச்சேரியில் பேசிய ராகுல் காந்தி, " விவசாயிகள் நிலத்தை வளர்ப்பது போல், நீங்கள் கடலை வளர்க்கிறீர்கள். டெல்லியில் விவசாயிகளுக்கு ஒரு அமைச்சகம் உள்ளது, ஆனால் உங்களுக்கு இல்லை. டெல்லியில் உங்களுக்காக யாரும் பேசுவதில்லை. ஆட்சிக்கு வந்ததும், மீனவர்களுக்காக பிரத்யேகமாக அமைச்சகத்தை உருவாக்குவேன். உங்களின் பிரச்னைகள் டெல்லியில் பேசப்பட்டுத் தீர்க்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: 'சர்வதேச ஆண்கள் நாளும் கொண்டாடப்பட வேண்டும்' - பாஜக பெண் எம்பி