டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 2021இல் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தின் மூத்த கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
மேற்கு மாநிலத்துக்கு வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் முன்னெடுக்க வேண்டிய தேர்தல் பணிகள் தொடர்பாக ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்று மாலை 3.30 மணிக்கு ஆலோசிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஜிதின் பிரதாஸா, எம்.பி.க்கள் மற்றும் சட்டப்ரேவை உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மூத்தத் தலைவர் தேர்தல் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பான தகவல்களை அளிக்கின்றனர் என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்களும் காங்கிரஸிற்கு ஆதரவளிக்காமல் உள்ளனர்.
மேலும் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டு 10.16 சதவீத மக்கள் ஆதரவுடன் காணப்பட்ட பாஜக, தற்போது 4 மடங்கு வளர்ச்சி கண்டு 40 சதவீத வாக்குகளுடன் காணப்படுகிறது. அக்கட்சி மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை வென்றிருந்தது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: ’நாட்டிற்கு அடித்தளமிட்ட தொலைநோக்கு பார்வையாளர் நேரு’: ராகுல் காந்தி புகழாரம்