நீலகிரி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேரளாவில் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் செப்.29 நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தரவுள்ளார். அப்போது பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு அடுத்த நாள் ராகுல் காந்தி கர்நாடகாவை நோக்கி பயணிக்கவுள்ளார். கூடலூரில் காலை 11 மணியளவில் வந்து சேரும் ராகுல் காந்தி ஆமைக்குளத்திலிருந்து மீண்டும் பயணத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது. இதில் பல்வேறு தொழிலார்கள் சங்கத்தினரையும், பழங்குடியின மக்களையும் சந்திக்கவுள்ளார். “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இந்தியாவில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ’காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு உரிமை உண்டு’ - தமிழிசை சௌந்தரராஜன்