இந்தூர் (மத்தியப் பிரதேசம்): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முன்னாள் நண்பரும் காங்கிரஸ் பிரமுகருமான ஜோதிராதித்ய சிந்தியா குறித்து கூறுகையில், “சிந்தியா காங்கிரஸில் இருந்தால் முதலமைச்சராக ஆகி இருப்பார். பாஜகவுக்கு சென்று பின் இருக்கை மாணவர் ஆகிவிட்டார்” என்றார் கிண்டலாக.
இது தொடர்பாக பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்ஜியாவிடம் செய்தியாளர்கள் வினாயெழுப்பினர். இதற்கு பதிலளித்த கைலாஷ், “ராகுல் ஒரு முழுநேர தீவிரமான அரசியல்வாதி கிடையாது. அவரது கருத்து குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விவகாரம் குறித்து கூறுகையில், “வாக்கெடுப்பு நெருங்கிவிட்டதால் அவர் இதை செய்கிறார்” என்றார். காங்கிரஸ் மூத்தத் தலைவர் சாக்கோவின் விலகல் குறித்து பேசுகையில், “காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பிரச்சினையில் உள்ளது” என்றார். மேலும், காங்கிரஸில் நடக்கும் சூழ்நிலைகளை பார்க்கும்போது, “காங்கிரஸ் முக்தி பாரத்” உருவாகி வருவது தெரிகிறது என்றார்.
இதையும் படிங்க: கடுமையாக காயமுற்ற மம்தா பானர்ஜி- மருத்துவ அறிக்கை பகீர்!