ETV Bharat / bharat

Goa Elections 2022: ராகுல் காந்தியின் கோவா பயணம் திடீர் ரத்து! - ராகுல் காந்தி

Goa Elections 2022: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கோவா பயணத்தின் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Feb 1, 2022, 4:52 PM IST

டெல்லி : அழகிய கடற்கரை மாநிலமான கோவாவில் வருகிற 14ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சராக பிரமோத் சாவந்த் உள்ளார். 40 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு வருகிற 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 3ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

ஒருபுறம் இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸூம், ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதாவும் அரசியல் காய்களை நகர்த்திவருகின்றன. இந்த நிலையில் நாளை (பிப்.2) ராகுல் காந்தி கோவா சென்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் தற்போது அவரது பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்.2ஆம் தேதிக்கு பதில் பிப்.4ஆம் தேதி ராகுல் காந்தி கோவா செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பயணத்தின் தேதி ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

ராகுல் காந்தியின் பயணம் திடீரென மாற்றப்பட்டுள்ளது, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Goa Polls: 22 தொகுதிகளை வென்று மீண்டு(ம்) வருவோம்- பிரமோத் சாவந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.