ETV Bharat / bharat

தொடரும் ராகுல் காந்தியின் மக்களைத் தேடிய பயணம் - இம்முறை டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட்! - income disparity

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது தனித்துவமான பாணியில், டெல்லியின் மிகப்பெரிய சில்லறை மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றான ஆசாத்பூர் மண்டிக்கு விஜயம் செய்து, விற்பனையாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினார்.

தொடரும் ராகுல் காந்தியின் மக்களைத் தேடிய பயணம் - இம்முறை டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டுக்கு  சர்ப்ரைஸ் விசிட்!

author img

By

Published : Aug 1, 2023, 1:26 PM IST

Updated : Aug 1, 2023, 1:45 PM IST

டெல்லி: காங்கிரஸ் தலைவர் முன்னாள் ராகுல் காந்தி, அவருக்கே உரிய தனித்துவ பாணியில், டெல்லியின் மிகப்பெரிய சில்லறை மற்றும் மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒன்றான ஆசாத்பூர் மண்டிக்கு விஜயம் செய்து, அங்கு விற்பனையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். தனது பாரத் ஜோடோ யாத்திரை, 136 நாட்களுக்குள் நிறைவுபெறவில்லை என்பதை நாட்டு மக்களுக்கும், அதிகாரம் படைத்த பிரிவினருக்கும் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி உள்ளார். ராகுல் காந்தி முன்னதாக, சோனிபட்டில் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு இருந்த விவசாயிகளிடமும், கரோல் பாக் பகுதியில், பைக் பழுதுபார்க்கும் சந்தையில், தொழிலாளர்களையும் சமீபத்தில் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 1ஆம் தேதி) அதிகாலை 4 மணிக்கே, பரபரப்பாக இருக்கும் காய்கறி சந்தைக்கு ராகுல் காந்தி சென்றார், இது எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் போராட்டங்கள் மற்றும் நிறைவேறாத விருப்பங்களின் அடையாளமாக விளங்கும் இந்த இடத்தில், முகத்தில் புன்னகையுடன், ராகுல் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அவரைப் பார்க்க திரண்டிருந்த கூட்டம், அவர் கொடுத்த மரியாதைக்கும் போற்றுதலுக்கும் சான்றாக இருந்தது. அரசியல் சார்பு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் ராகுல் காந்தி ஈர்க்கப்பட்டார். ராகுல் காந்தி சந்தையில் நடந்து செல்லும்போது, இந்த எளிய வணிகர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வதற்கான பெரும் பொறுப்புணர்வை உணர்ந்து இருந்தார்.

நாடு முழுவதும் உள்ள குடும்பங்களை பாதித்து வரும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைவாசி உயர்வு குறித்து, பணிவுடன், உண்மையான அக்கறையுடன், விற்பனையாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடி, அவர்களின் சோகங்களில் பங்கு கொண்டார். அவர்கள் தங்கள் போராட்டங்களையும் கஷ்டங்களையும் பகிர்ந்துகொண்டதை அவர் உன்னிப்பாகக் கேட்டறிந்த ராகுல், அவர்களின் வாழ்க்கையின் அடிப்படை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முற்பட்டார்.

பணவீக்கம் மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறியதன் மூலம் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கி உள்ளதாக , மத்தியில் ஆளும் அரசாங்கம் மீது கடுமையாக குற்றம்சாட்டினார். அவரது வார்த்தைகள் வெகுஜனங்களின் அவலத்தை ஆழமாக உணர்ந்த ஒருவரின் கருத்தாக இருந்தது.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து உள்ள வீடியோவில், போராடும் காய்கறி விற்பனையாளரின் காட்சி, அவர்களது வேதனையான தருணங்கள் குறித்த விழ்ப்புணர்வை தனக்குள் ஏற்படுத்தியதாக, ராகுல் குறிப்பிட்டு உள்ளார்அவர்களின் குரலாக, விளிம்புநிலை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக, ராகுல் காந்தி ஒலித்து வருகிறார்.

சமீபத்தில், சோனிபட் பகுதியில், விவசாயிகளுக்கு மத்தியில், தேசத்திற்கு உணவளிக்க உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஆர்வத்தைத் தூண்டிய நிகழ்வு, அவர் மீது ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. கரோல் பாக் பைக் பழுதுபார்க்கும் சந்தைக்கு அவர் சென்ற நிகழ்வு, , சமூகத்தின் ஒவ்வொரு துறையினரின் போராட்டங்களையும் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற அவரது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி இருந்தது.

டெல்லி ஆசாத்பூர் மார்க்கெட்டில், கடின உழைப்பாளிகள் மற்றும் வியாபாரிகள் உடனான அவரது தொடர்பு மிகுந்த ஆழமானது. இவர்களின் அன்றாட முயற்சிகளே தேசத்தின் உயிர்நாடி என்பதை ராகுல் அறிந்து வைத்து உள்ளார்.

இதையும் படிங்க: "அமைச்சர்கள் பின்னால் மறைந்து கொள்கிறார் பிரதமர் மோடி"! - எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்!

Last Updated : Aug 1, 2023, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.