மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூரில், அம்மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர், "ஹர் கர் திரங்கா பிரச்சாரம் தேசபக்தியின் அடையாளம் அல்ல.
இந்த பிரச்சாரத்திற்கு பதிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நாட்டில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலித்தீன் உள்ளிட்ட பொருட்களால் செயற்கையாக தேசியக் கொடியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு, காதி நிறுவனம் மூலம் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு மொழி மட்டுமே. வரி செலுத்திய பிறகும் நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. மக்களின் வரிப்பணம் முக்கிய பிரமுகர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் செலவிடப்படுகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க:நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி