இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், “பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக நேற்று (பிப். 18) மூன்றாவது குவாட் கூட்டம் நடைபெற்றது.
இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் அமைச்சரவைக் குழு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் சுதந்திரமான, திறந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பராமரிப்பதற்கான ஒத்துழைப்பின் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், உலகளாவிய காலநிலை மாற்றம், பரஸ்பர நலன்களின் பிற பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துரையாடினர் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு (2020) அக்டோபர் 6ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்ற கடைசி குவாட் கூட்டத்தில் பரிமாறப்பட்ட கருத்துகளின் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்பு இருந்தது.
இதையும் படிங்க...தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!