கோபன்ஹேகன்: 28வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றைப் பிரிவில் 2வது சுற்றில் 2021ஆம் எடிஷனில் வெண்கல பதக்கம் வென்ற லக்ஷயா சென், உலக தரவரிசயில் 51 வது இடத்தில் உள்ள சொரியாவின் ஜியோன் ஹியோக் ஜினுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-க்கு 11, 21-க்கு 12 என்ற நேர் செட் கணக்கில் கொரிய வீரரான ஜியோன் ஹியோக் ஜினை வீழ்த்தினார். இதன் மூலம் லக்ஷயா சென் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் 3வது சுற்றில் தாய்லாந்து வீரரான குன்லவுட் விடிட்சார்னை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: Praggnanandhaa in FIDE World Cup 2023: டிராவில் முடிந்த முதல் சுற்று!
மற்றோரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9 இடத்தில் இருக்கும் இந்திய வீரரான பிரணாய், இந்தோனேசியா வீரர் சிகோ அவுரா டிவி வார்டோயோவை எதிர்கொண்டார். இதில் பிரணாய் 21-க்கு 9, 21-க்கு 14 என்ற நேர் செட் கணக்கில் சிகோ அவுரா டிவி வார்டோயோவை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2வது சுற்றில் களம் இறங்கிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து முன்னாள் சாம்பியனான ஜாப்பானின் நோசோமி ஒகுஹாராவுடன் மோதினார். தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் ஆடிய பி.வி சிந்து, 14-க்கு 21, 14-க்கு 21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
இதன் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக கால் இறுதிக்கு முன்னதாகவே சிந்து வெளியேறி உள்ளார். பி.வி சிந்து இதுவரை மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Ind Vs Ire 3rd T20 : இறுதி ஆட்டத்திலும் வெல்லும் முனைப்புடன் இந்தியா! அயர்லாந்து தாக்குபிடிக்குமா?