ETV Bharat / bharat

ஓராண்டுக்குள் மூன்று முதலமைச்சர்கள் - உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புஷ்கர் சிங் தாமி
புஷ்கர் சிங் தாமி
author img

By

Published : Jul 3, 2021, 7:52 PM IST

உத்தரகாண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மாநில இளைஞர் அணி தலைவராக இருந்துள்ளார்.

மாநிலத்தின் இளம் முதலமைச்சர்

45 வயதான புஷ்கர் தாமி, கதிமா தொகுதி உறுப்பினராவார். உத்தரகாண்ட் மாநிலத்தின் இளம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகிறார். முன்னாள் ராணுவ வீரரின் மகன், சாதராண தொண்டனான தன்னை, கட்சி முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது பெருமை அளிப்பதாக புஷ்கர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, கடந்த ஒரு வருடத்திற்குள் மூன்று முதலமைச்சர்களை மாநிலம் கண்டுள்ளது. மூன்றரை வருட காலம் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தை நீக்கி, தீர்த் சிங் ராவத் என்பவரை பாஜக முதலமைச்சராக்கியது.

இவர் மூன்று மாத காலமே பதவியில் தாக்கு பிடித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டு காலம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவாக்சின் தடுப்பூசி 78.8% பலன் தரும்; மூன்றாம் கட்ட ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.