ETV Bharat / bharat

கேரளாவின் 'சில்வர் லைன்' திட்டத்திற்கு மாவோயிஸ்ட்டுகள் எதிர்ப்பு

author img

By

Published : Apr 3, 2022, 5:22 PM IST

கேரள அரசின் "சில்வர் லைன்" ரயில்பாதை திட்டத்தை கண்டித்து, மாவோயிஸ்ட்டுகள் சுவரொட்டிகள் ஒட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா

கேரளாவின் வடக்கு மற்றும் தெற்குக் கடலோர மாவட்டங்களை இணைக்கும், ரயில் பாதை அமைப்பதற்கான "சில்வர் லைன்" திட்டத்தை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது.

திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பத்து மாவட்டங்களை இணைக்கும் இத்திட்டம், எதிர்கால சந்ததியினருக்கு பெரிதும் பயன்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

ஆனால், சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்பாதை அமைப்பதால், பல மாவட்டங்களில் உள்ள பல்லுயிர்சூழல் அழியும் நிலை ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து, பொதுமக்களும் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டிக்குன்னு (Mattikunnu) என்ற பகுதியில் பேருந்து நிலையத்தில், கேரள அரசின் "சில்வர் லைன்" திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து, மாவோயிஸ்ட்டுகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இத்திட்டதை எதிர்க்கும் மக்களுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிபிஐ மாவோயிஸ்ட்டுகளால் ஒட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த சுவரொட்டிகளில், கேரள அரசின் கொள்கைகள், மத்திய பாஜக அரசைப் போலவே இருக்கிறது என்றும், கேரள அரசு மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் கேரள அரசின் இத்திட்டத்தை கண்டித்து, போராட்டத்தில் இறங்க வேண்டும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர். சுவரொட்டிகள் ஒப்பட்டிருந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.