பஞ்சாப்: பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வாலா (28), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்து மூஸ்வாலா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், சித்து மூஸ்வாலா பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் இன்று (மே 29) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சித்து தனது நண்பர்களுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தத் துப்பாக்கி தாக்குதல் நடந்ததாகவும், இதில் சித்து உயிரிழந்த நிலையில், அவரது இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றது. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட மறுநாளே சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சியினருக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கோல்டி பிரார் (Goldie brar) என்பவர் ஈடுபட்டுள்ளார்.
-
The murder of Shri Sidhu Moose Wala, Congress candidate from Punjab & a talented musician, has come as a terrible shock to the Congress party & the entire nation.
— Congress (@INCIndia) May 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Our deepest condolences to his family, fans & friends.
We stand united & undeterred, at this time of extreme grief. pic.twitter.com/v6BcLCJk4r
">The murder of Shri Sidhu Moose Wala, Congress candidate from Punjab & a talented musician, has come as a terrible shock to the Congress party & the entire nation.
— Congress (@INCIndia) May 29, 2022
Our deepest condolences to his family, fans & friends.
We stand united & undeterred, at this time of extreme grief. pic.twitter.com/v6BcLCJk4rThe murder of Shri Sidhu Moose Wala, Congress candidate from Punjab & a talented musician, has come as a terrible shock to the Congress party & the entire nation.
— Congress (@INCIndia) May 29, 2022
Our deepest condolences to his family, fans & friends.
We stand united & undeterred, at this time of extreme grief. pic.twitter.com/v6BcLCJk4r
இவர் மீது நாடு முழுக்க பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பிணையில் வெளியே வரமுடியாத வழக்குகள் சிலவும் உள்ளன. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த நிலையில் மே மாதம் தான் சொந்த நாடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - 9 பேர் கைது