இது குறித்து மத்திய போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கூறுகையில், "விவசாய மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும், 32 ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் இதுவரை முக்கிய பொருள்களை ஏற்றிச் செல்லும் இரண்டாயிரத்து 225க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களை இயக்க முடியவில்லை.
மேலும் வழித்தடங்களை மாற்றிவருவதால் கூடுதல் மின்சாரம், எரிபொருளுக்கு மிகுந்த செலவாகிறது. அதன்படி ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால், இதுவரை ரூ.1200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் போராட்டம் மேலும் தொடர்ந்தால் இழப்பு அதிகரிக்கக் கூடும்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால் பேராபத்து - பஞ்சாப் முதலமைச்சர்