சண்டிகர் : முன்னாள் காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் நகர்புறத் தொகுதியில் களம் காண்கிறார்.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
இந்தக் கட்சி பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சி சார்பில் 22 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Punjab Assembly Polls: கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்!