சண்டிகர்: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள் சிலர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் அமைச்சர் திக்ஷன் சுட் வீட்டின் முன்பாக மாட்டுச் சாணத்தை கொட்டிச் சென்றனர். இதுதொடர்பாக திக்ஷன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, ஐபிசி பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், நடைபெற்ற சம்பவத்தில் கொலை முயற்சி எதுவும் இல்லை எனக் கூறி, போராட்டக்காரர்கள் மீதான கொலை வழக்கை திரும்பப் பெற அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பத்து நாட்கள் தொடர் உயர்வுக்கு பின் சரிவை கண்ட பங்குச்சந்தைகள்