கரோனா தடுப்பு நடவடிக்கையாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏப்ரல் 23ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை மூடப்பட்டது. விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் 25ஆம் தேதி வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "கரோனா பரவல் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் ஏப்ரல் 23ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதிமுதல் 30ஆம் தேதிவரை மேலும் மூன்று நாள்கள் புதுச்சேரி பல்கலைக்கழகம் மூடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பு அறிக்கை சமர்பிக்க வேண்டும்!