புதுச்சேரி: ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, கரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் நேற்று முனம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சபாநாயகர் செல்வம், அப்பகுதி எம்எல்ஏ கலந்துகொண்டு மக்களுக்கு அரிசி வழங்குவதாக இருந்தது. ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே ரேஷன் கடை ஊழியர் மக்களுக்கு இலவச அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட சபாநாயகர் கோபமடைந்து ரேஷன் கடை ஊழியரை ஒருமையில் திட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை - ரூ.1000 பரிசுத் தொகை அறிவித்த முதலமைச்சர்