ETV Bharat / bharat

புதுச்சேரியில் நடிகை நக்மா கைது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்தை கண்டித்து, மகிளா காங்கிரஸ் தலைவி நக்மா தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

actress nagma
நடிகை நக்மா
author img

By

Published : Oct 4, 2021, 8:06 PM IST

புதுச்சேரி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து விவசாயிகளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை தடுக்க தவறிய உத்திரப் பிரதேச பாஜக அரசை கண்டித்து புதுச்சேரி ராஜிவ் காந்தி சிலை நான்கு முனை சந்திப்பில் மகிளா காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியல் செய்த நக்மா

இந்தப் போராட்டமானது, மகிளா காங்கிரஸ் தலைவியும், பிரபல நடிகையுமான நக்மா தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

செய்தியாளர் சந்திப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நக்மா, “உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு, இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்தும், உடனடியாக பிரியங்காவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

விவசாயிகள் மீது அக்கறையில்லாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. உடனடியாக பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

சாலை மறியல் செய்த நக்மா
சாலை மறியல் செய்த நக்மா

நக்மா கைது

இதனையடுத்து தான் தங்கியிருந்த விடுதிக்கு நக்மா மற்றும் மகிளா காங்கிரசார் சென்றனர். அப்போது விடுதியில் இருந்து வெளியேறிய புதுச்சேரி பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமசிவாயத்தை கண்டவுடன், மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து, அவர் புறப்பட தயாரான போது அவர் காரை முற்றுகையிட்டு பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் தனியார் விடுதி வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட காரணத்தால் மகிளா காங்கிரஸ் தலைவி நக்மா உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: ’நீ செய்யுற வேலை இருக்கே...’ - கமல்ஹாசனை விளாசிய பிக்பாஸ் போட்டியாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.