ETV Bharat / bharat

புதுச்சேரியில் பெரும்பான்மை யாருக்கு? வரும் 22ஆம் தேதி முடிவு - Majority party in Pondicherry

புதுச்சேரி: சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலளார் முனிசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பெரும்பான்மை யாருக்கு? வரும் 22ஆம் தேதி ரிசல்ட்

author img

By

Published : Feb 20, 2021, 3:03 PM IST

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் எம்எல்ஏ பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், காங்கிரஸ் 14, எதிர்கட்சி 14 என சம நிலையில் உள்ளனர்.

இதனால், ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பிப்ரவரி 18ஆம் தேதி ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், புதிதாக பொறுபேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பிப்ரவரி 22ஆம் தேதி 5 மணிக்குள் நாராயணசாமி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனை அடுத்து சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம் வரும் 22ஆம் காலை 10 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலளார் முனிசாமி அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியை தக்கவைப்பாரா நாராயணசாமி? பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.