புதுச்சேரி: வரும் ஜூன் 21ஆம் தேதி வரை மேலும் பல்வேறு தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. தனியார் துறை அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஊழியர்கள் பணிபுரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 விழுக்காடு கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிவிப்பில்;
- உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை மாலை 5 மணிவரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்
- ஹோட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி.
- தேநீர் கடைகள் பழச்சாறு நிலையங்கள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி அனைத்து கடைகளும் குளிர்சாதன வசதியின்றி இயங்கலாம்.
- பத்திரப்பதிவு வாகன விற்பனை போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இயங்க அனுமதி.
- தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க அனுமதி.
- ஊழியர்கள் கண்டிப்பாக கரோனா தொற்று தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
- பூங்கா, திரையரங்குகள் அரங்கம், அருங்காட்சியகம், நூலகங்கள் திறக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
- நாளை(ஜூன்.15) முதல் வரும் ஜூன்.21ஆம் தேதி வரை எஃப்.எல்.2(FL 2) டூரிசம் வகை உரிமம் உள்ள மதுபானக் கூடங்கள், 50 விழுக்காடு இருக்கை திறன் கொண்ட ஹோட்டல் உணவகங்களுக்கு மட்டுமே அனுமதி.
- எஃப்.எல்.2(FL 2) சில்லறை வகை மதுபான கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்கள் அனுமதி இல்லை.