ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சரின் தொகுதி திமுகவிற்கு ஒதுக்கீடு! - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாரயாணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

former
former
author img

By

Published : Mar 13, 2021, 6:02 PM IST

புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு காங்கிரஸ் - திமுக கூட்டணியில், காங்கிரஸ் 15 தொகுதிகள், திமுக 13, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 1 தொகுதியில் களம் இறங்குகின்றன. இந்த நிலையில் திமுக 13 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில், முன்னாள் முதலமைச்சர் நாரயாணசாமியின் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் கார்த்திகேயன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜான் குமார் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது.

சட்டப்பேரவை உறுப்பினர் இல்லாத நாராயாணசாமி முதலமைச்சர் ஆனார். ஆனால் அவர் போட்டியிட நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அங்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்தநிலையில், தற்போது இந்தத் தொகுதி திமுகவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இதுவரை நடந்துள்ள 13 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றி பெற்றிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இத்தொகுதியில் இந்த முறை போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் முத்தியால்பேட்டை அல்லது காமராஜ் நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.