ETV Bharat / bharat

புதுச்சேரியில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி.. நாராயணசாமி குற்றச்சாட்டு.. - புதுச்சேரியில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி.. முதலமைச்சர் அலுவலகம புரோக்கர் அலுவலகம.. நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு..

புதுச்சேரியில் காவலர் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி என தரகர்கள் பேரம் பேசுவதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி.. முதலமைச்சர் அலுவலகம புரோக்கர் அலுவலகம.. நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு.. Puducherry ex cm Narayanasamy charges police posting job scam

author img

By

Published : Mar 21, 2022, 12:52 PM IST

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வேலையை யாரும் செய்யக்கூடாது என்றும், இந்த நேரம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றார். மேலும், வரும் 2024 மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால் பாஜகவை எளிதில் வீழ்த்தலாம்.

அதற்கான வியூகங்களை இப்போதே வகுக்க வேண்டும். இது தோல்வியல்ல வெற்றிக்கான முதல் படி என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்தியில் இருந்து நிறைய நிதி கொண்டு வந்து வளர்ச்சி காண்போம் என்றனர். ஆனால் ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு அதிக நிதி வாங்கவில்லை என்றும், தற்போது முதலமைச்சர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட் போடாமல் இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டசபையைக் கூட்ட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாஜக கூட்டணியில் மத்திய அரசோடு முதலமைச்சர் ரங்கசாமி இணக்கமாக உள்ளார். ஆனால் ஏன் அவர் முழுமையான பட்ஜெட் போடவில்லை? இதற்குப் புதுச்சேரி பாஜக தலைவர்கள் முட்டுக்கட்டை போடுகின்றார்களா? அல்லது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு முழுமையான பட்ஜெட் போட கூடாது என தடுத்து நிறுத்துகின்றார்களா? என பாஜகவும், முதலமைச்சர் ரங்கசாமியும் விளக்கம் தர வேண்டும் என்று கூறிய அவர், கடந்த காங்கிரஸ் அரசின் 5 ஆண்டு கால ஆட்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி எந்தளவிற்கு தொல்லை தர முடியுமோ, அந்தளவு தொல்லை கொடுத்தார்.

நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

அதுபோன்ற தொல்லை தற்போது இல்லை. அப்படி இருந்தும் ஏன் முழு பட்ஜெட்டை போட வில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நான் ஏற்கனவே முதலமைச்சர் , அமைச்சர் அலுவலகங்கள் புரோக்கர் அலுவலகங்களாகச் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டியிருந்தேன் என்றும், அது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் கூறினார். தற்போது காவலர் எழுத்து தேர்வு முடிவடைந்த நிலையில் புரோக்கர்கள் உலா வருகின்றனர். எனது நண்பர் ஒருவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி என்று கூறியுள்ளனர்.

இந்த நிலை வந்தால் இந்த அரசு ஊழல் அரசு என மக்கள் மத்தியில் தோன்றும், முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு தகுதியின் அடிப்படையில் வேலை தர வேண்டும். காவலர் பணி எங்கள் ஆட்சியில் ஆரம்பித்த திட்டம். தனிக் கவனம் செலுத்தி ஊழலுக்கு இடமின்றி தகுதி, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். கஞ்சா விற்பது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க வேண்டும் என்றார்.

மேலும் காஷ்மீர் பைல்ஸ் என்ற படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டு வருகிறது. அதில் இந்துக்களுக்கு விரோதியாக இஸ்லாமியர்கள் இருப்பதாக உள்ளது. இதைவிட மோசமான நிலை என்னவென்றால் அந்த படத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர், அமைச்சர்கள் பார்த்துள்ளார். இதில் ஆளுநர் அரசியல் செய்கிறார் என தெளிவாக தெரிகிறது.

முதலமைச்சர் ரங்கசாமி நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சென்று பார்த்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை அரசு தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்ததைப் பார்க்கும் போது இவர்களும் மதக் கலவரத்தைத் தூண்ட உதாரணமாகவும், காரணமாகவும் இருக்கிறார்களா என்று மக்கள் மத்தியில் தோன்றுகிறது" என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் கூறியதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.