ETV Bharat / bharat

பட்டியலின மக்களின் நிலம் தேவைப்பட்டால் மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்! - Puducherry cm rangasamy

புதுச்சேரி மாநில ரயில்வே விரிவாக்கத்திற்கு பட்டியலின மக்களின் நிலம் தேவைப்பட்டால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
author img

By

Published : Jul 22, 2021, 5:31 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை இன்று (ஜூலை 22) கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் சட்டபேரவை அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "புதுச்சேரி மாநிலம் உப்பளத்தில் உள்ள ராசு உடையார் தோட்டம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி, ரயில்வே விரிவாக்கம் செய்ய தேவைப்படுவதாக கூறி காலி செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் வற்புறுத்திவருகிறது.
இந்தப் பகுதி ஓதுக்குப்புறமாக உள்ளதால் ரயில்வே விரிவாக்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இம்மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

எனவே இந்த இடம் ரயில்வே விரிவாக்கத்திற்கு தேவையா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். நிலம் தேவைப்பட்டால் மாற்று இடம் கொடுக்க வேண்டும். தேவையில்லை எனில் அங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.