புதுச்சேரி: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதி. இதேபோல் மதுக்கடைகள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள், மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணிவரை செயல்பட அனுமதி. கடற்கரை சாலை காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும்.
அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் திறப்பு!