ETV Bharat / bharat

'சனிப்பெயர்ச்சி விழாவை தடுக்க நினைத்த கிரண்பேடியின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது' - நாராயணசாமி! - thirunallar saniperyarchi news in Tamil

காரைக்கால்: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறாமல் தடுக்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எடுத்த அனைத்து முயற்சிகளும் முறையடிக்கப்பட்டுள்ளன என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

author img

By

Published : Dec 27, 2020, 2:52 PM IST

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள தர்பாணயோஸ்வரர் கோயில் சனிப்பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “சனிப்பெயர்ச்சி விழா உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களால் கொண்டாடப்படும் விழா. பல தடைகளை தாண்டி இறைவன் அருளால் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. எல்லா மத திருவிழாக்களும் சிறப்பாக நடைபெற வேண்டும். அதனை யாரும் தடை செய்யும் நோக்கில் செயல்படக் கூடாது. அதுவே எனது எண்ணம். ஆனால் அதனை தடை செய்யும் நோக்கில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டார்.

முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

சனிப்பெயர்ச்சி விழா தொடர்பாக பொதுநல வழக்கில் கிரண் பேடி தன்னை பிரதிவாதியாக இணைத்துக் கொண்டார். சன்னிதானம், அரசு, அமைச்சர்கள் எடுத்த மேல்முறையீட்டு பலனாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது.

மதநம்பிக்கை, வழிபாடுகளில், அதிகாரத்தில் இருப்பவர்கள் தலையிடக் கூடாது. நீதிமன்றத்தின் தீர்ப்பு புதுச்சேரி மாநில மக்களுடைய வெற்றி, இந்துக்களுடைய வெற்றி, இந்தத் தீர்ப்பு அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு படிப்பினை" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.