ETV Bharat / bharat

செடிகளின் கிளையில் புதிய செடிகள் உருவாக்கல் - வேளாண் விஞ்ஞானிக்கு பாராட்டு - செய்முறை

செடிகளின் கிளைகளில் இருந்து எண்ணற்ற வேர்களை உருவாக்கி தொற்றில்லா புதிய செடிகளை உருவாக்க முடியும் என்பதை வேளாண் விஞ்ஞானி ஸ்ரீ லட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

Agricultural Scientist  Scientist  puducheery speaker  puducheery speaker meet Agricultural Scientist  puducheery news  puducheery latest news  புதுச்சேரி செய்திகள்  வேளாண் விஞ்ஞானி  புதிய வகை கண்டுபிடிப்பு  செய்முறை  செடிகளில் புதிய கண்டுபிடிப்பு
வேளாண் விஞ்ஞானி
author img

By

Published : Aug 9, 2021, 6:13 AM IST

புதுச்சேரி: கூடப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஸ்ரீ லட்சுமி, பல்வேறு ஆராய்ச்சி மூலம் தரமான அதிக லாபம் தரக்கூடிய வேளாண் பயிர்களையும், புதிய ரகங்களையும் உருவாக்கி வருகிறார்.

இவரது தந்தை வெங்கடபதி என்பவர் பத்மஶ்ரீ விருது வாங்கியுள்ளார். இந்நிலையில் ஶ்ரீ லட்சுமி செடிகளில் இருந்து புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார்.

புதிய வகை கண்டுபிடிப்பு

ஒரு செடியின் கிளையில் இருந்து பல வேர்களை உருவாக்கி அதன் மூலம் நிறைய செடிகளை வளர்க்கும் புதிய யுக்தியை கண்டுபிடித்துள்ளார்.

மண்ணிலிருந்து செடிகள் வளர்வதால் செடிகளுக்கு நிறைய பூச்சு தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், நோய் தொற்றும் ஏற்படாமல் இருக்கும் வகையில், தற்போது செடிகளின் கிளைகளில் வேரை உண்டாக்கி அதன் மூலம் மண் இல்லாமல் 100 சதவீதம் செடிகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

இந்தப் புதிய வேளாண் விஞ்ஞான யுக்தியை, புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வேளாண்மை செடியில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ள வேளாண் விஞ்ஞானி ஶ்ரீ லட்சுமியை பாராட்டினார்.

செய்முறை

Agricultural Scientist  Scientist  puducheery speaker  puducheery speaker meet Agricultural Scientist  puducheery news  puducheery latest news  புதுச்சேரி செய்திகள்  வேளாண் விஞ்ஞானி  புதிய வகை கண்டுபிடிப்பு  செய்முறை  செடிகளில் புதிய கண்டுபிடிப்பு
செடிகளில் புதிய கண்டுபிடிப்பு

இந்த கண்டுபிடிப்பு குறித்து ஶ்ரீ லட்சுமி செய்முறை விளக்கம் செய்தார். அதில், “நோய் தொற்று இல்லாத செடிகளை கண்டுபிடித்து அதன் கனுப்பகுதுக்கி கீழ் 1 அங்குலம் சுற்றிலும் 70 சதவீதம் எத்தனால் மற்றும் 20 சதவீதம் டபுள் டிஸ்டல் தண்ணீர் கலவையால் சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அதன் தோலை உரித்துவிட்டு அதில் கருப்பு பிளாஸ்டிக் பேப்பரால் நன்று சுற்றி கட்டிவிட வேண்டும். 30 தினங்களில் புதியதாக விண்பதியம் செய்த இடத்தில் எண்ணற்ற வேர்கள் உருவாகி இருக்கும். இதில் 98 முதல் 100 சதவீதம் புதிய செடிகள் உருவாகும்” என செய்முறை விளக்கம் காண்பித்தார்.

இதையும் படிங்க: 'கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.