ETV Bharat / bharat

புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!

புதுச்சேரி மாநிலத்தின் புதிய சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்பலம் செல்வம் இன்று பதவியேற்றார்.

புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!
புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு!
author img

By

Published : Jun 16, 2021, 1:12 PM IST

Updated : Jun 16, 2021, 1:19 PM IST

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. என்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று (ஜுன் 15) மதியம் 12 மணியுடன் முடிவடைந்தது. இதில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வத்தைத் தவிர வேறுயாரும் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.

இன்று காலை கூடிய புதுச்சேரி சட்டப்பேரவையில் புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் இணைந்து அவரது இருக்கையில் அமரவைத்தனர்.

புதுச்சேரி மாநில புதிய சபாநாயகராக ஏம்பலம் செல்வம் பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வின்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நாஜீம், ரங்கசாமியை பிரம்மா என்று கூறி நகைச்சுவையாக பேசியதால் சபையில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையை சபாநாயகர் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார். அடுத்த 40 நிமிடங்களில் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான் குமார், ரிச்சர்டு ஜான் குமார், கல்யாணசுந்தரம், சாய் சரவணக் குமார், நியமன உறுப்பினர்கள் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு, என் ஆர் காங், சுயேட்சை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி அரசியல் வரலாற்றில், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் மறுப்பு

Last Updated : Jun 16, 2021, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.