புதுச்சேரி: புதுச்சேரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 15, திமுகவுக்கு 13, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 எனத் தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு விசிகவுக்கு உழவர்கரை தொகுதி இன்று (மார்ச் 15) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், விசிகவின் முதன்மைச் செயலர் தேவபொழிலன் ஆகியோர் கையொப்பம் இட்டனர். இத்தொகுதியின் காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏவுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சலசலப்பு!