புதுச்சேரி அண்ணா சிலை அருகே நீயூடோன் தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டரின் கட்டடம் சேதமடைந்ததால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனையொட்டி, சில கடைகள் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அப்படி ஒரு கடையில், ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டீக்கடை நடத்திவந்தார்.
இந்த நிலையில் நேற்று (ஏப். 18) தியேட்டரின் வெளிப்புற சுவர் இடிந்து வெங்கடேசன் கடை மீது விழுந்தது. இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒதியங்சாலை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மருத்துவமனையில் வெங்கடேசன் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தும் நிர்வாகிகள்