புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வருவதால் கடந்த 7ஆம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன்(ஜூன் 21) உள்ள நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை முதல் தளர்வுகளின் விவரங்கள்
அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறந்திருக்கலாம். திரையரங்குகள், மல்டி காம்ப்ளக்ஸ் நிறுவனங்கள் திறக்கப்படாது. அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை 100 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்படலாம்.
திருமணங்கள் 100 நபர்களை கொண்டு நடத்திக்கொள்ளலாம். அனைத்து மதுபான கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்கலாம். சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கான பட்டப்பிடிப்பை 100 பேரை கொண்டு நடத்த அனுமதி.
கடற்கரை சாலையில் காலை 5 மணி முதல் காலை 9 மணிவரை நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி, கூடுதலாக பூங்காக்கள் இதே நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள திறக்கப்படுகிறது.
இதையும் படிங்க: நீட்-ஐ ரத்து செய்ய நீதிபதி குழுவுக்கு பாமக ஆலோசனை!