பிரதமர் மோடிக்கு புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாம் அலையில் புதுச்சேரியில் நாள்தோறும் சுமார் 1000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
புதுச்சேரியில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. தொற்றுக்கு ஆளானவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தும் இல்லை.
பல்வேறு மாநிலங்களிலுள்ள மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து ரெம்டெசிவிர் மருந்தை, மத்திய சுகாதாரத் துறை கொள்முதல்செய்து, அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் ரெம்டெசிவிர் மருந்துக்கான ஒதுக்கீட்டை பெறும் மத்திய அரசின் பட்டியலில், புதுச்சேரி மாநிலம் விடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு குறைந்தது 10,000 ரெம்டெசிவிர் ஊசியாவது புதுச்சேரிக்கு உடனே வழங்க வேண்டும். மேலும் புதுச்சேரியிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் ரெம்டெசிவிர் ஊசியை வெளியிலிருந்து வாங்கி வருமாறு நிர்வாகம் வலியுறுத்துகிறது. ஆனால் வெளிச்சந்தையில் மக்கள் வாங்க முடியவில்லை.
எனவே ஜிப்மரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அந்த மருந்து கிடைக்க செய்வதையும், பிரதமர் உறுதிசெய்ய வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒருநாள் பாதிப்பில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய கரோனா!