ETV Bharat / bharat

மிக்ஜாம் புயல்: ஆபத்தை உணராமல் புதுச்சேரி கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த உலா! - sea rage is increasing at Puducherry

புதுச்சேரியில் கடல் சீற்றம் ஆர்ப்பரித்து காணப்படும் நிலையில் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆபத்தை உணராமல் அலட்சியம் காட்டும் பொதுமக்கள்
புதுச்சேரியில் 10 அடிக்கும் மேல் எழும்பும் கடல் சீற்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 4:34 PM IST

புதுச்சேரியில் 10 அடிக்கும் மேல் எழும்பும் கடல் சீற்றம்

புதுச்சேரி: வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் நிலையில் ஆபத்தை உணராத பொதுமக்கள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறியுள்ள நிலையில் அதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் அதிக காற்றுடன் கடல் சீற்றமும், அதிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமானது 10 அடிக்கும் மேல் எழும்பி ஆர்ப்பரித்து காணப்படுகிறது.

இதனை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கடலில் அதிக சீற்றம் இருந்தும், ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர். கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில் புயல் கரையை கடக்கும் வரை கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் அனுமதிக்காமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடலில் இறங்கி குளித்த சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அங்கிருந்து வெளியேற்றினர். இதனிடையே புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் மீனவ கிராம பகுதிகளில் இருக்கும் மீனவர்களின் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர்.

இந்த புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து துறை செயல்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளார். புயல் மற்றும் அதிக கன மழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை பத்திரமாக மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) யின் இரண்டு நிறுவனங்கள் புதுச்சேரிக்கு வந்து தயார் நிலையில் உள்ளனர். ஆபத்தை அரியாமல் பொதுமக்கள் இதுபோன்று அலட்சியமாக இருப்பது பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் புயல்: துறைமுகத்தில் 'எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது யாருக்காக?..அவை எதை உணர்த்துகின்றன?..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.