கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இல்லத்தில் பி.டி., உஷாவின் பயிற்சியாளர் ஓம் நம்பியார் இன்று (ஆக.19) காலமானார். அவருக்கு வயது 89.
பி.டி., உஷாவின் பயிற்சியாளரான ஓம் நம்பியார் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். இவருக்கு 1985 ஆம் ஆண்டு, நாட்டின் சிறந்த பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது.
துரோணாச்சாரியா ஓம் நம்பியார்
2021 ஆம் ஆண்டில் தடகளத் துறையில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. ஓம் நம்பியார், பி.டி., உஷாவின் சொந்த ஊரான கேரளாவின் கண்ணூரில் பையோலிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
கோழிக்கோட்டில் உள்ள குருவாயூரப்பன் கல்லூரியில் பயின்ற ஓம் நம்பியார் கல்லூரி நாள்களில் விளையாட்டு வீரராக திகழ்ந்தார்.
பி.டி., உஷா பயிற்சியாளர்
அவரது கல்லூரி முதல்வர் நம்பியாரை ஆயுதப் படையில் சேரவும், அவரது விளையாட்டு வாழ்க்கையைத் தொடரவும் ஊக்கம் அளித்தார். இந்நிலையில் ஓம் நம்பியார் 1955இல் இந்திய விமானப்படைக்கு தேர்வானார். அதன் பின்னர் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஓம் நம்பியாருக்கும், பி.டி., உஷாவுக்கும் இடையிலான ஆசிரியர்-மாணவர் உறவு 1976 இல் அவர் கண்ணூர் விளையாட்டுப் பிரிவில் பணிபுரிந்தபோது தொடங்கியது. தடகளத்தில் பி.டி., உஷா பல்வேறு விருதுகளை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஐநாவில் முக்கிய பதவி!