ஸ்ரீஹரிகோட்டா(ஆந்திரா): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தயாரிப்பான பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட், ஏழு செயற்கைக்கோள்களுடன் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ ஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இது முழுக்க முழுக்க சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வணிகத்தேவைக்காக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதில் முதன்மை செயற்கைக்கோளானது ஏவப்பட்ட 23வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. முன்னதாக, சந்திரயான் 3-ன் ஏவும் பணிக்குப் பின், பிஎஸ்எல்வி ராக்கெட் இதற்காகப் பயன்பட்டது.
இதில் முதன்மை செயற்கைக்கோளான DS-SAR உடன் பொருத்தப்பட்ட 6 துணை செயற்கைக்கோள்களுடம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதில் 6 துணை செயற்கைக்கோள்கள், சிங்கப்பூரைச் சார்ந்தவை. குறிப்பாக, இந்த செயற்கைக்கோள்களானது பூமியில் இருந்து 535 கி.மீ தூரத்தில், 5 சுற்றுப்பாதை சாய்வில் நிலைநிறுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட்டானது 58ஆவது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதில் முதன்மை செயற்கைக்கோளான DS-SAR, சிங்கப்பூரின் Defence Science and Technology Agencyயும்,ST இன்ஜினியரிங்கின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இந்த முதன்மை செயற்கைக்கோளான DS-SAR அனைத்து வானிலை நிலவரங்களையும், துருவமுனையில் துல்லியமான படங்களை எடுத்தும் அனுப்பும் திறன் கொண்டவை. இதன்மூலம் கிடைக்கும் சேவைகளை, சிங்கப்பூரின் ST இன்ஜினியரிங் நிறுவனம், தங்களது வணிக வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ஸ்பேஷியல் சேவைகளுக்கு தர இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பாரம்பரிய முறைப்படி மலேசிய ஹாக்கி வீரர்களுக்கு வரவேற்பு!