ETV Bharat / bharat

இந்தியாவில் மாபெரும் போராட்டங்களை எதிர்கொண்ட சட்ட திருத்தங்கள்! - நிலம் கையகப்படுத்தும் சட்டம் -2013

மத்திய அரசு ஏற்கனவே இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதும், புதிதாக சட்டங்களை அமல்படுத்துவதும் வழக்கமான நடைமுறைதான் என்றாலும், சில சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரியளவில் போராட்டம் நடைபெற்றுள்ளன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் போராட்டங்களை எதிர்கொண்ட சட்ட திருத்தங்கள்!

மத்திய அரசின் சட்ட திருத்தங்களுக்கு எதிரான போராட்டம்

author img

By

Published : Dec 18, 2020, 1:06 PM IST

Updated : Dec 18, 2020, 1:55 PM IST

வேளாண் சட்டம் 2020

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கடும் அமளிக்கு மத்தியில் புதிய வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் புதிய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல், தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜகவுடனான கூட்டணி குறித்தும் மறுபரிசீலனை செய்வதாகக் அக்கட்சி கூறியுள்ளது.

மூன்று வேளாண் சட்டங்கள்

விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா; விவசாயிகள் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா; மற்றும் அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா ஆகிய இந்த மூன்று மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவுள்ளதாகப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த மூன்று மசோதாக்களும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குத் தங்கள் பொருள்களை மண்டிகளுக்கு வெளியே விற்பனை செய்ய அனுமதிக்கின்றன. மேலும், வேளாண் தொழில் நிறுவனங்களுடன் தனிப்பட்ட வகையிலும், விவசாயிகள் ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுக் கொள்ளலாம்.

முக்கிய பொருள்களை எவ்வளவு தூரம் சேமித்து வைக்கலாம் உள்ளிட்ட வரம்புகளையும் இது நீக்குகிறது. இந்தப் புதிய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் இனி தங்கள் பொருள்களை எந்த மாவாட்டத்திற்கும் எந்த மாநிலத்திற்கும் விற்பனை செய்ய எடுத்துச் செல்லலாம்.

இதற்காக செஸ் உள்ளிட்ட எந்த வரியையும் விவசாயிகள் மீது மாநில அரசால் விதிக்க முடியாது. ஒப்பந்த விவசாயத்திற்குத் தேவையான சட்டங்களையும், இந்த மசோதா வழங்குகிறது. அதாவது விவசாயிகளும், வாங்குபவர்களும் அறுவடை செய்வதற்கு முன்பே தேவையான உடன்பாட்டை எட்டலாம்.

மேலும், அசாதாரண சூழ்நிலைகளில் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் விலை மிக அதிகமாக உயரும்போது, அவற்றை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மத்திய அரசுக்கு இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது. அரசியல் கட்சிகள், பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) போன்ற வேளாண் அமைப்புகளும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (ஏ.ஐ.கே.எஸ்.சி) போன்ற பெரிய விவசாய அமைப்புகளும், பெரும்பாலான விவசாயிகளும் இந்த மசோதாக்களை எதிர்க்கின்றன.

வேளாண் சட்டம் 2020
வேளாண் சட்டம் 2020

இந்த மசோதாக்கள் பெரிய நிறுவனங்களைத் தவிர வேறு யாருக்கும் உதவாது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இது அழிக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இந்தச் சட்டங்களை கூட்டாட்சி கட்டமைப்பின் மீதான "அப்பட்டமான ஒரு தாக்குதல்" என்று விமர்சித்துள்ளது.

மேலும், இந்தச் சட்டங்களை நிராகரிப்பதாகவும், பஞ்சாப் அரசு தனது சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. காங்கிரஸ் தவிர, ஆம் ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும், இந்த மசோதாக்களை எதிர்க்கின்றன. இருப்பினும், முன்பு, பாஜகவுடன் கூட்டணயில் இருந்த சிவசேனா இந்த மசோதாக்களை ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் பாஜக அவற்றை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியது.

அதே நேரம் பிஜூ ஜனதா தளம் இந்த மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. முதலில் இந்த மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கினர். விரைவிலேயே ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த போராட்டம் பரவின. தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாயக் குழுக்கள் அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளத்துள்ளன.

முத்தலாக் தடைச் சட்டம்
வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019

கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தியபோது நாடு முழுவதும் பெரியளவில் போராட்டம் நடைபெற்றன. இந்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, சீக்கிய, பவுத்த, ஜோராஸ்ட்ரியன் அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள்.

மாறாக, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். மேலும், மூன்று நாடுகளில் வந்த ஆறு மதங்களை சேர்ந்த மக்கள் இந்தியாவில் 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஆறு ஆண்டுகள் வசித்திருந்தாலேயே குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்தச் சட்டம் கூறுகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிபிஐ (எம்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியாது என்று கூறி, இந்த மசோதா கடுமையாக உறுதியாக எதிர்த்து வருகின்றன.

மேலும், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, சீக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. இது 1985ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் உடன்படிக்கையின் விதிகளை ரத்து செய்யும் வாய்ப்புள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் உடன்படிக்கையில் அனைத்து மதங்களுக்கும் ஒரே விதமான விதிகளே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019

முத்தலாக் தடைச் சட்டம்

இஸ்லாம் மதத்தில் தலாக் என்றால் விவாகரத்து என்று பொருள். அதாவது ஒரு முஸ்லீம் ஆண் தனது மனைவியுடனான அனைத்து திருமண உறவுகளையும் இந்த வார்த்தையை கூறுவதன் மூலம் முடித்துக்கொள்ள முடியும். முஸ்லீம் சட்டத்தின் கீழ், முத்தலாக் என்பது திருமண உறவில் இருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. ‘தலாக்’ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரிப்பதன் மூலம், ஒரு இஸ்லாமிய மனிதன் தனது திருமணத்தை முடித்துக்கொள்ள முடியும்.

இந்த உடனடி விவாகரத்து முறை தலாக்-இ-பிதாத் என்றும், முத்தலாக் என்றும் அழைக்கப்படுகிறது. முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) 1937 இந்த முத்தலாக் நடைமுறையை சட்டப்பூர்வமாக்கி அனுமதித்தது. இது ஒரு முஸ்லீம் கணவருக்கு தனது மனைவி மீது ஆதிக்கம் செலுத்த உதவுகிறது.

முத்தலாக் தடைச் சட்டம் எனப்படும் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019 இந்திய நாடாளுமன்றத்தால் 2019 ஜூலை 30ஆம் தேதி ஒரு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது முத்தலாக் முறையை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றுகிறது. மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோது இதற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. இந்த முத்தலாக் சட்டத்தின் மூலம் குற்றத்தைச் செய்யும் ஒரு முஸ்லீம் ஆணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும். மேலும், இது ஜாமின் பெற முடியாத குற்றமாகும்.

முன்னதாக, இந்த முத்தலாக் முறைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு தடை விதித்திருந்தது. கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு எதிராகவும் நாடு முழுவதும் பரவலாகப் போராட்டம் நடைபெற்றது.

முத்தலாக் தடைச் சட்டம்
முத்தலாக் தடைச் சட்டம்

சட்டப்பிரிவு 370 நீக்கம்

370ஆவது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை மத்திய அரசு கடந்தாண்டு நிறைவேற்றியது. மக்களவையில் பாஜகவுக்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதால் இச்சட்டம் எளிதில் நிறைவேறியது. அதன்படி இந்த மசோதாவுக்கு ஆதரவாக, 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவு காஷ்மீரில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

மத்திய அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களை கட்டுப்படுத்த காவல் துறையினரும், துணை ராணுவ படையினரும் காஷ்மீர் பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019

ஜிஎஸ்டி சட்டம் 2017

ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது அப்போது இருக்கும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், மாறிகொண்டே இருக்க வேண்டும். இன்று, சர்வதேச அளவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த நிலையை எட்ட தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல்(1991), வங்கிகள் தேசியமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.

இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அத்தகைய ஒரு சீர்திருத்த நடவடிக்கைதான் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா. ஜிஎஸ்டி என்பது உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை அனைவருக்கும் பொருந்தும் ஒற்றை வரி முறையாகும்.

இது விற்பனை வரி, மத்திய - மாநில அரசுகளின் மதிப்புக் கூட்டு வரி, கலால் வரி என, அனைத்து மறைமுக வரிகளையும் ஒன்றிணைக்கிறது. ஜிஎஸ்டி மசோதா 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

புதிய வரிகளை அமல்படுத்துவதற்கும் வசூலிப்பதற்கும் மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை இந்தச் சட்டம் பறிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, அனைத்து இந்திய வர்த்தக வரி கூட்டமைப்பு டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

நிலம் கையகப்படுத்தும் சட்டம் -2013

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 2013ஆம் ஆண்டின் மத்திய அரசின் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி ஒரு அரசின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நில உரிமையாளர்களின் ஒப்புதல் தேவையில்லை. அரசு-தனியார் இணையும் திட்டத்திற்கு 70 விழுக்காடும் தனியார் திட்டத்திற்கு 80 விழுக்காடும் ஒப்புதல் தேவை. நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் அவசரநிலை ஏற்படவில்லை என்றால் சமூக தாக்க மதிப்பீடு தாக்கல் செய்ய வேண்டியது அவசியமாகும். இந்த திட்டம் நீர்ப்பாசனத்திற்காக இருந்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடும் தேவை. இந்தச் சட்ட திருத்தங்களுக்கு எதிராக விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.

Last Updated : Dec 18, 2020, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.