புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் புதுவை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தற்போதைய ஊரடங்கில் நிறைய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்துக்குப் போராடிவருகின்றனர்.
இவர்களைத் தவிர சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களும், சுய தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் நிறைய பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆண்டு கட்டணத்தைச் செலுத்த வற்புறுத்திவருகின்றன.
உண்மையில் மக்கள் முன்னெப்போதுமில்லாத வகையில் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முதலமைச்சர் அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் கட்டணம் கேட்பதைக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
இவ்விஷயத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறேன். தற்போதைய ஊரடங்கால் நிறைய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரத்துக்குப் போராடிவருகின்றனர். இவர்களைத் தவிர சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்களும், தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் செலுத்த வேண்டிய பல்வேறு கடன்களுக்கான தவணைத் தொகைக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும், கடன்களுக்கு வட்டி விதிக்கவும் ஆறு மாதம் தடைவிதிக்க வேண்டும். மேலும் இந்த நிதியாண்டில் முதலாவது காலாண்டில் கட்ட வேண்டிய முன்கூட்டிய வரியை இரண்டாவது காலாண்டு வரை ஒத்திவைக்க வேண்டும். எனது கோரிக்கைகளின் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மத்திய அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.