ETV Bharat / bharat

புதிய கட்டடம் கட்டுவதற்கு உள்ள பணம் உழவர்களுக்கு மட்டும் இல்லையா?

மத்திய அரசிற்குப் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்ட பணமிருக்கும்போது கரும்பு உழவர்களுக்கு அளிப்பதற்குப் பணமில்லையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Priyanka Gandhi attacks BJP govt over unpaid dues of UP sugarcane farmers

author img

By

Published : Dec 7, 2020, 2:14 PM IST

டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்திலுள்ள கரும்பு உழவர்களுக்கு மத்திய அரசு அளிக்கவேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பாஜக அரசிற்குப் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது. பிரதமருக்காக சிறப்பு விமானம் வாங்குவதற்காக 16 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு உள்ளது.

உத்தரப் பிரதேசத்திலுள்ள கரும்பு உழவர்களுக்கு அளிக்க வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை திருப்பி அளிக்க பணம் இல்லையா? 2017ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை கரும்பின் விலை ஏற்றப்படவில்லை. இந்த பாஜக தலைமையிலான அரசு பெருமுதலாளிகளுக்காக மட்டுமே சிந்திக்கக்கூடியதாக உள்ளது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருந்தார்.

Priyanka Gandhi attacks BJP govt over unpaid dues of UP sugarcane farmers
பிரியங்கா காந்தி ட்வீட்

மேலும், "குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அழிப்பதன் மூலம் உழவர்களைப் பலவீனப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். பிரதமரின் ஒவ்வொரு முடிவும் முதலாளிகளுக்கு லாபத்தை ஈட்டும் நோக்கம் கொண்டது. உழவர்கள் இப்போது இந்தச் சதியை புரிந்துகொண்டுள்ளனர்" எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டிவருகிறது.

இதற்கிடையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், டெல்லியை இணைக்கும் மாநில நெடுஞ்சாலைகளிலும் பத்து நாள்களைக் கடந்து உழவர்கள் போராடிவருகின்றனர்.

இதையும் படிங்க: 'அடிப்படை விவரங்கள் கூட தெரியாது ஐயா': மத்திய குழுவிடம் முறையிட்ட விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.