ETV Bharat / bharat

Priyanka Gandhi: கன்னட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - பிரியங்கா காந்தி - பிரியங்கா காந்தி

Priyanka Gandhi:கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
author img

By

Published : Jan 16, 2023, 7:25 PM IST

Priyanka Gandhi: பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் வாக்கு அறுவடைக்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அடிக்கடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிடோர் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க.வுக்கு ஈடாக காங்கிரஸ் கட்சி வேரூன்றி காணப்படுகிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் அரசியல் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

மறுபுறம் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் திட்டத்துடன் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆளும் திட்டத்துடன் பா.ஜ.க. பல்வேறு கவர்ச்சிகரத் திட்டங்களை அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு பேலஸ் கிரவுண்ட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் "நான் தலைவி" என்ற மெகா பெண்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். முன்னதாக விமான நிலையம் வந்த பிரியங்கா காந்திக்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. கே. சிவகுமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, 'மே மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 'பா.ஜ.க. ஆட்சியின் கீழ் மாநிலத்தின் நிலை குறித்து அறிந்து அதன்பின் வாக்குகளிக்குமாறு' தெரிவித்தார்.

தான் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாக கூறிய பிரியங்கா காந்தி, பா.ஜ.க ஆட்சியின் கீழ் மக்களின் வாழ்க்கைமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதா என்றும், கடந்த சில ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை சிறப்பாகிவிட்டதா என்றும் மக்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்பி அதன்பின் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கர்நாடகாவின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாக கூறிய பிரியங்கா காந்தி, 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருப்பதாக கூறினார். காவல் உதவி ஆய்வாளர் பணிகளை நிரப்ப லஞ்சம் பெற்று ஊழல் செய்தது மிக அவமானகரமான செயல் எனவும் அவர் சாடினார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு குரு லஷ்மி திட்டம், அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்டப் பல்வேறு கவர்ச்சிகர திட்டங்களை காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இதில் குரு லஷ்மி திட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒன்றரை கோடி பெண்கள் பயனடைவார்கள் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’மகதாயி’ திட்ட அறிக்கைக்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான முடிவு, ஒக்கலிகா, லிங்காயத் சமூக மக்களுக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு ஆகியவை இந்த தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.