ETV Bharat / bharat

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பிரியா மாலிக்! - Priya Malik wins gold

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Priya Malik
பிரியா மாலிக்
author img

By

Published : Jul 25, 2021, 8:04 PM IST

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் பளு தூக்கும் போட்டியில், கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு நேற்று (ஜூலை24) வெள்ளிப்பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து யாரேனும் தங்கம் வென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலர் எதிர்ப்பார்த்த நிலையில், பிரியா மாலிக் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற செய்தி காட்டு தீயென பரவியது.

எதையும் நம்பும் தேசப்பற்று!

மனம் எனும் மாயை, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களை, எவ்வித பகுத்தறிவுமின்றி உடனே ஏற்கும். தாய்நாட்டிற்கு தங்கம் வெல்லும் செய்தியை கேட்க துடித்த இந்தியர்கள் பிரியா மாலிக் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக உடனே நம்பினர்.

ட்வீட்
ட்வீட்

ஆனால் பிரியா மாலிக், ஹங்கேரியில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில்தான் பங்கேற்று தங்கம் வென்றிருந்தார்.

இந்தியா சார்பில் 73 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பிரியா மாலிக்கிற்கும், பெலாரஸை சேர்ந்த செனியா பேட்டபோவிச்சிற்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 5-0 என செனியாவை வீழ்த்தி பிரியா மாலிக் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.

சர்வதேச வெற்றியை ருசித்த மாலிக்

திறமையான ஆட்டத்தை தன்வசம் வைத்திருக்கும் பிரியா மாலிக், ஹரியானாவை சேர்ந்தவர். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா தொடரிலும் தங்கம் வென்றிருந்தார். பள்ளி அளவிலான விளையாட்டுகளில் தடம் பதித்திருந்த மாலிக்கிற்கு, இந்த வெற்றி உலக அளவிலான அறிமுகமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: Tokyo Olympics: பி வி சிந்து அபார வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.