ETV Bharat / bharat

'பணத்தை விட தனியுரிமை முக்கியம்' - உச்ச நீதிமன்றம் அதிரடி! - புதிய பிரைவசி பாலிசி

டெல்லி: புதிய பிரைவசி பாலிசி தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக், வாட்ஸ் அப்புக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், பணத்தை விட தனியுரிமை முக்கியம் என கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Feb 15, 2021, 9:55 PM IST

பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வாட்ஸ் அப் பயனாளர் கொள்கை 2016 வகுக்கப்பட்டது. அதற்கு எதிராக, கர்மண்யா சிங் சரீன், ஸ்ரேயா சேத்தி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

புதிய பிரைவசி பாலிசியை அமல்படுத்த தடை விதிக்க கோரி அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, பேஸ்புக், வாட்ஸ்அப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம், "2, 3 ட்ரில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிறுவனங்களாக நீங்கள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கு தனியுரிமையே முக்கியம். அவர்களின் தனியுரிமையைக் காப்பது நீதிமன்றத்தின் கடமை" எனக் குறிப்பிட்டது.

புதிய பிரைவசி பாலிசி தொடர்பாக வாட்ஸ் அப்பு நிறுவனத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பு நீதிமன்றத்தில், "பாதுகாக்கப்பட வேண்டிய பயனாளர்களின் தகவல்கள் பகிரப்படக் கூடாது. மாற்றத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.