பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா அடுத்த தனபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிறைக் கைதியை போலீசார் அழைத்து வந்து உள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் சிறைக் கைதி காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த இரண்டு பேர் கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் நிதிமன்ற வளாகத்திலேயே கைதி பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் பதில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார், துப்பாக்கி முனையில் கைது செய்தனர். உயிரிழந்த நபர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கடந்த சில மாதஙகளாக சிறையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பிடிபட்டவர்கள் யார் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சம்பவத்தின் போது, பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதையும் படிங்க : "கண்ணியமாக சாக விருப்பம்; நீதிபதியால் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்" - பெண் நீதிபதி பரபரப்பு கடிதம்.. தலைமை நீதிபதி உத்தரவு என்ன?