கரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
அதில் இரு நாடுகளிலும் கரோனாவால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து இருவரும் கேட்டறிந்தனர். இந்தியாவுக்குச் செய்த உதவிக்காக அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மேலும் கரோனா தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்கள், மருந்துகள் விநியோகம் ஆகியவை குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
இதையும் படிங்க: பிபின் ராவத்துடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை!