ETV Bharat / bharat

குளிர்காலக் கூட்டத்தொடர்: சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை - அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை

author img

By

Published : Nov 28, 2021, 9:53 AM IST

Updated : Nov 29, 2021, 2:44 PM IST

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 29) தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் நரேந்திர மோடி மத்தியில் ஆளும் பாஜக அரசு, 26 மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்படாத மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தக் கூட்டத்தொடரில், மிக முக்கியமாக மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா, கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் மசோதா, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசின் பங்குகளைக் குறைக்க வகை செய்யும் மசோதா உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது.

இந்நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை ஒட்டி நாளை காலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நடக்கிறது. இதற்கு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது, நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிப்பது, ஆரோக்கியமான விவாதங்களைக் கொண்டுசெல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவும், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இன்று அழைப்புவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: ஓலா, உபரில் பயணிப்பவரா? இனி உங்களுக்கும் ஜிஎஸ்டிதான் - புத்தாண்டில் புது சுமை!

Last Updated : Nov 29, 2021, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.