ETV Bharat / bharat

PM Modi : ரயில்கள் விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை... பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Modi
Modi
author img

By

Published : Jun 3, 2023, 6:14 PM IST

Updated : Jun 3, 2023, 6:28 PM IST

பாலசோர் : ஒடிசா ரயில்கள் விபத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உள்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் 280க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த பிரதமர் மோடி விபத்து ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். மீட்பு பணிகள், விபத்துக்கான காரணம், சீரமைப்பு பணிகள், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். மேலும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மத்திய மற்றும் மாநில மீட்புக் குழுவினருடன் பேசிய பிரதமர் மோடி மீட்பு பணியில் ஏற்பட்ட சவால்கள் குறித்து கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சரவை செயலாளர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா உள்ளிடோரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்கள் அசவுகரியத்தை எதிர்கொள்ளாமல் இருக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறினார்.

தொடர்ந்து, ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் பிரமிளா மல்லிக் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும், விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

  • #WATCH | "It's a painful incident. Govt will leave no stone unturned for the treatment of those injured. It's a serious incident, instructions issued for probe from every angle. Those found guilty will be punished stringently. Railway is working towards track restoration. I met… pic.twitter.com/ZhyjxXrYkw

    — ANI (@ANI) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரயில்கள் விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி, "ரயில்கள் விபத்து ஒரு வேதனையான சம்பவம். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு எந்தக் எல்லைக்கும் செல்லும். படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து அறுதல் கூறினேன். இந்த அதிதீவிர விபத்து குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது.விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் அரசு எப்போது இருக்கும். நாங்கள் விபத்துக்கு காரணமான யாரும் தப்பிக்க முடியாது" என்று கூறினார்.

இதையும் படிங்க : Odisha Train Accident : பிரதமர் மோடி ஆய்வு! சிகிச்சை பெறுபவர்களை சந்திப்பு?

Last Updated : Jun 3, 2023, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.